உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது புனே விமான நிலையம்

Posted On: 03 JUN 2021 4:53PM by PIB Chennai

சீரம் மையம் தயாரிக்கும் கோவிஷீ்ல்டு தடுப்பூசிகளை நாடு முழுவதும் விநியோகிப்பதில், புனே விமான நிலையம் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஜனவரி 12ம் தேதி முதல் கடந்த மே 27ம் தேதி வரை, 10,000க்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ்கள்,  9052 பெட்டிகளில் (சுமார் 2,89,465 கிலோ எடையில்) புனே விமான நிலையத்திலிருந்து நாட்டின் பல நகரங்களுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசிகளின் தடையற்ற போக்குவரத்தைபுனே விமான நிலைய குழுவினர் உறுதி செய்தனர்.

இந்த விமான நிலையம் 2,16,000 டோஸ் கொவிட் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பியுள்ளது. இது தவிர கொவிட் பரிசோதனை உபகரணங்களையும் தில்லி மற்றும் கொல்கத்தாவுக்கு புனே விமான நிலையம் அனுப்பியுள்ளது. 

மேலும், மத்திய, மாநில அரசுகளின் கொவிட் தடுப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணிகளின் பாதுகாப்பான பயணத்தையும் புனே விமான நிலையம் உறுதி செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724079

*****************

 

 


(Release ID: 1724143) Visitor Counter : 227