கலாசாரத்துறை அமைச்சகம்
தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் தனித்துவம் வாய்ந்த பயணக் கண்காட்சி
Posted On:
03 JUN 2021 4:04PM by PIB Chennai
கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய கவுன்சில், லண்டனின் அறிவியல் அருங்காட்சியகக் குழுவுடன் இணைந்து, ‘தடுப்பூசியைத் தேடிச் செல்லுங்கள்’ என்ற சர்வதேச பயணக் கண்காட்சியை நடத்தவுள்ளது.
அதிவிரைவாக தடுப்பூசியை மேம்படுத்துவதற்கு புதிய வழிமுறைகளை மேற்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிகள், வரலாற்றுப் பார்வையில் தடுப்பூசியை நோக்குவது பற்றி இந்த கண்காட்சி எடுத்துரைக்கும். தடுப்பூசியின் தயாரிப்பு மற்றும் செயல்திறனில் உள்ள அறிவியல் பூர்வமான அம்சங்களை விளக்குவதுடன், தடுப்பூசியின் உற்பத்திக்குப் பின்னால் இருக்கும் விரைவான மேம்பாடு, தயாரிப்பு, போக்குவரத்து, விநியோகம் முதலியவற்றையும் இது காட்சிப்படுத்தும்.
இந்தக் கண்காட்சியை 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் துவக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, போன்ற மெட்ரோ நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தக் கண்காட்சி பயணிக்கும்.
இதுபற்றி பேசிய அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய கவுன்சிலின் தலைமை இயக்குநர் திரு அர்ஜித் தத்தா சவுத்ரி, ‘சூப்பர் பக்ஸ்: நுண்ணுயிர்க் கொல்லிகளின் முடிவு?’ என்ற கண்காட்சியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நம் வாழ்வில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பெருவாரியான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மற்றொரு கண்காட்சியை நடத்துவதற்காக, லண்டனைச் சேர்ந்த எஸ்எம்ஜி குழுவுடன் இணையவுள்ளோம்.
கொரோனா பெருந்தொற்றினால் இந்தியாவிற்கு பெரிதும் தொடர்புடையதாக இந்தக் கண்காட்சி அமையும்.
இந்த முறை ஒவ்வொரு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் வகையில் நடமாடும் அறிவியல் கண்காட்சி பேருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் பேருந்து, ஊரகப் பகுதிகளில் கண்காட்சியின் முக்கியத் தகவல்களைக் கொண்டு செல்லும். அதேவேளையில் இந்தியா மற்றும் இங்கிலாந்தின் அறிவியல் அருங்காட்சியகங்கள் இடையேயான உறவை இந்த திட்டம் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்”, என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724058
*****************
(Release ID: 1724137)
Visitor Counter : 243