நிதி அமைச்சகம்

சிக்கிம் மாநிலத்தில் சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

Posted On: 03 JUN 2021 1:59PM by PIB Chennai

சிக்கிம் மாநிலத்தில் முக்கிய மாவட்டங்களில் உள்ள சாலைகளின் மேம்பாட்டு திட்டத்துக்கு உதவுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியுடன் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில், மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. 

இதன் மூலம் சிக்கிம் மாநிலத்தில், முக்கிய நகரங்கள், ஊரகப் பகுதிகள், புனித தலங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் இணைப்பு வசதிகள் மேம்படும்.

இந்த கடன் ஒப்பந்தத்தில், இந்திய அரசு சார்பில் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலாளர் திரு ராஜத் குமார் மிஸ்ரா, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குனர் திரு டகியோ கோனிசி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதன்பின் பேட்டியளித்த திரு மிஸ்ரா, இந்த கடன் ஒப்பந்தம், முக்கிய சாலைகளை மேம்படுத்த சிக்கிம் அரசு அளிக்கும் முன்னுரிமைக்கு உதவும் என்றார். இதன் மூலம் சிக்கிம் மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இணைப்பு மேம்படும்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724010

*****************



(Release ID: 1724042) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Punjabi