விவசாயத்துறை அமைச்சகம்

தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தற்சார்புக்கான எதிர்கால திட்டம்: விவசாயிகளுடன் வேளாண் அமைச்சர் உரையாடல்

Posted On: 02 JUN 2021 7:21PM by PIB Chennai

விதை சிறு பெட்டக திட்டத்தை இன்று தொடங்கி வைத்த மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், அதிக விளைச்சல் அளிக்கும் விதைகளை கொண்ட பெட்டகங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

விவசாயிகளிடம் பேசிய அவர், தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாநிலங்களுடன் இணைந்து தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார். 2014-15-ம் ஆண்டில் இருந்து தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க புதிய உத்வேகத்துடன் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு புதிய வகை விதைகளை அறிமுகப்படுத்தும்

விதை சிறு பெட்டக திட்டம் ஒரு முக்கியமான நடவடிக்கை என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.

மத்திய வேளாண் இணை அமைச்சர்கள் திரு புருஷோத்தம் ருபாலா மற்றும் திரு கைலாஷ் செளத்ரி ஆகியோருடன் இணைந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுடன் காணொலி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் உரையாடினார்.

தேசிய விதைகள் கழகம், நாஃபெட் மற்றும் குஜராத் மாநில விதைகள் கழகம் ஆகியவை வழங்கிய விதை பெட்டகங்களுக்கான நிதியை தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மத்திய அரசு வழங்கியுள்ளது.

விவசாயிகளுடனான உரையாடலின் போது இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. விதைகளை இதர விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்த விவசாயிகள், மாநில வேளாண் அலுவலர்கள் மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரங்களின் பணிகளை பாராட்டினர். காரிப் பருவ விதை விதைத்தல் தொடங்குவதற்கு முன் விவசாயிகளை சென்றடைவதற்காக 2021 ஜூன் 15 வரை விதைகளின் விநியோகம் தொடரும்.

*****************



(Release ID: 1723906) Visitor Counter : 263


Read this release in: English , Urdu , Hindi , Punjabi