வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

சவால் சூடுபிடிக்கிறது: 41 நகரங்கள் மிதிவண்டிக்கு உகந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

Posted On: 02 JUN 2021 7:16PM by PIB Chennai

கொவிட் எதிர்வினைகளில் ஒன்றாக பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் 2020 ஜூன் 25 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட மிதிவண்டி ஓட்டுவதற்கான சவாலான 'India Cycles4Change' நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக இடைவெளியை உறுதி செய்யும், உடல் நலனுக்கு உகந்த, சுற்றுச்சூழலுக்கு தோழமையான தனிநபர் போக்குவரத்துக்கு தீர்வான மிதிவண்டி ஓட்டுதல் மீது கடந்த ஒரு வருடமாக நாடு முழுவதும்  பலர் கவனம் செலுத்தி வருகின்றனர். மிதிவண்டி புரட்சி நடைபெற்று வருகிறது என்றால் அது மிகையாகாது.

மிதிவண்டி சவாலில் 104 நகரங்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ள நிலையில், 41 நகரங்களில் மிதிவண்டி ஓட்டுதலுக்கு உகந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆய்வுகள், ஆலோசனைகள், மிதிவண்டிப் பாதைகள், பாதுகாப்பான இடங்கள், திறந்தவெளி தெருவோர நிகழ்ச்சிகள், மிதிவண்டி ஊர்வலங்கள் மற்றும் ஆன்லைன் பிரச்சாரங்கள் இவற்றில் அடங்கும்.

மிதிவண்டி புரட்சிக்கான விதை 2020-ல் தூவப்பட்ட நிலையில், நகரங்களும், மக்களும் கைகோர்த்து தாங்கள் வாழும் பகுதிகளை மிதிவண்டிகளின் சொர்க்கமாக மாற்றி வருகின்றனர். இதன் விளைவுகள் சிறப்பாக அமைந்துள்ளன. மாநில அரசுகள் இதை ஊக்கப்படுத்தி வரும் நிலையில், இன்னும் அதிகமானோர் இதில் இணைய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகரங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஷ்ரா கூறியுள்ளார்.

41 நகரங்களின் பட்டியல் மற்றும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

*****************



(Release ID: 1723893) Visitor Counter : 203