வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வணிக வர்த்தகம்: 2021 மே மாதத்திற்கான முதல்நிலை தரவு

प्रविष्टि तिथि: 02 JUN 2021 11:55AM by PIB Chennai

இந்தியாவின் வணிக ஏற்றுமதி இந்தாண்டு மே மாதத்தில் 32.21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்தாண்டு இதே கால அளவை விட 67.39 சதவீதம் அதிகம்.

இந்தியாவின் ஏற்றுமதி இந்தாண்டு ஏப்ரல் முதல் மே வரை 62.84 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்தாண்டு இதேகால அளவை விட 112.29 சதவீதம் அதிகம்.

இந்தியாவின் இறக்குமதி இந்தாண்டு மே மாதத்தில் 38.53 அமெரிக்க டாலர். இது கடந்தாண்டு இதே கால அளவை விட 68.54 சதவீதம் அதிகம். கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தை விட 17.47 சதவீதம் குறைவு.

இந்தாண்டு ஏப்ரல்-மே மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி 84.25 பில்லியன் அமெரிக்க டாலர். கடந்தாண்டு இதே கால அளவை விட 110.73 சதவீதம் அதிகம். 2019ம் ஆண்டு ஏப்ரல்-மே இறக்குமதியைவிட 5.41 சதவீதம் குறைவு.

இந்தாண்டு மே மாதத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 6.32 பில்லியன் அமெரிக்க டாலர்.  இது கடந்தாண்டு இதே கால அளவை விட 74.69 சதவீதம் அதிகம். கடந்த 2019ம் ஆண்டு மே மாத வர்த்தக பற்றாக்குறையை விட 62.49 சதவீதம் குறைவு.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723624

*****************


(रिलीज़ आईडी: 1723747) आगंतुक पटल : 298
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी