பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை பணியாளர் தலைமை அதிகாரியாக வைஸ் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பதவிஏற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2021 5:36PM by PIB Chennai

கடற்படை பணியாளர் தலைமை அதிகாரியாக வைஸ் அட்மிரல் திணேஷ் கே திரிபாதி இன்று(ஜூன் 1ம் தேதி பொறுப்பேற்றார். இவர் கடந்த 1985ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்தார். இவர் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் முறையில் நிபுணர். இவர் கடற்படையின் முன்னணி கப்பல்களில் தவகல் தொடர்பு அதிகாரியாகவும், மின்னணு போர்முறை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பலில் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 

வெல்லிங்டனில் உள்ள பாதுகாப்பு படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயின்ற இவர், திம்மையா பதக்கம் பெற்றவர். நியூபோர்ட் ரோதே தீவில் உள்ள அமெரிக்க கடற்படை போர் கல்லூரியிலும் இவர் பயிற்சி பெற்று, மதிப்பு மிக்க ராபர்ட் பேட்மேன் சர்வதேச விருதையும் பெற்றுள்ளார். 

*****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1723482) வருகையாளர் எண்ணிக்கை : 328
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी