பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை துணைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ரவ்னீத் சிங் பொறுப்பேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2021 2:26PM by PIB Chennai

கடற்படைத் துணைத் தளபதியாக, வைஸ் அட்மிரல் ரவ்னீத் சிங் இன்று (ஜூன் 1ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் கடற்படையில் கடந்த 1983ம் ஆண்டு சேர்ந்தார். கடற்படையின் விமானப்பிரிவில் இவர் பயிற்சி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். கடற்படையில் உள்ள மிக் 29 கேயுபி விமானம் உட்பட பல வகை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இவர் இயக்கியுள்ளார்.

கடற்படையின் முன்னணி கப்பல்கள் மற்றும் விமானப் பிரிவுக்கு இவர் தலைமை தாங்கியுள்ளார்.

கடற்படை தளபதியின் பாராட்டுப் பத்திரம், வ்சேனா பதக்கம், அதிவிஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார்.

கடற்படை துணைத் தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் எம்.எஸ்.பவார், நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அட்மிரல் ரவ்னீத் சிங் இன்று பொறுப்பேற்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723375

•••••••••••••••••••


(வெளியீட்டு அடையாள எண்: 1723410) வருகையாளர் எண்ணிக்கை : 257
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी