எரிசக்தி அமைச்சகம்
உத்தரகாண்டில் உள்ள பேஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலை மற்றும் இதர மருத்துவ வசதிகளை ஆர்ஈசி நிறுவவுள்ளது
Posted On:
31 MAY 2021 7:04PM by PIB Chennai
முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமான ஆர்ஈசி லிமிடெட், தனது பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவான ஆர்ஈசி ஃபவுண்டேஷன் மூலம் உத்தரகாண்டில் உள்ள பிதோராகரின் தலைமை மருத்துவ அதிகாரியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதன் படி, ரூ 1.85 கோடி மதிப்பிலான நிதி உதவிக்கான உறுதியை ஆர்ஈசி அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று உத்தரகாண்டில் உள்ள பிதோராகரில் இருக்கும் பேஸ் மருத்துவமனையில் நிறுவப்படும்.
இதனுடன், 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சக்கரங்களுடன் கூடிய 200 ஃபவுலர் மெத்தைகள் உள்ளிட்டவையும் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.
இதன் மூலம், இம்மருத்துவமனையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 250-ல் இருந்து 450 ஆக உயரும்.
உள்ளூர் சமூகத்திற்கு தேவையான மருத்துவ பராமரிப்பை அளிக்கும் நோக்கில் இந்த கொவிட் சிகிச்சை மையத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723195
----
(Release ID: 1723273)
Visitor Counter : 200