வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஏப்ரல் 2021-இல் எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டு எண்கள் (அடிப்படை: 2011-12 = 100)

Posted On: 31 MAY 2021 5:00PM by PIB Chennai

பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை 2021 ஏப்ரல் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டு எண்ணை வெளியிடுகிறது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ரிஃபைனரி பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகளை கணக்கிட்டு இந்த குறியீடு வெளியிடப்படுகிறது. தொழில் உற்பத்தி குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எடையில் 40.27 சதவீதத்திற்கு இந்த எட்டு தொழில்கள் காரணமாக உள்ளன.

2021 ஏப்ரல் மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு 126.7 ஆக இருந்தது, இது 2020 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 56.1 (தற்காலிகம்) சதவீதம் உயர்ந்துள்ளது.

2021 ஏப்ரலில் அடைந்துள்ள இந்த வளர்ச்சிக்கு காரணமாக 2020 ஏப்ரலின் குறைந்த அளவிலான குறியீட்டு அடிப்படையும், கொவிட்-19- கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் விளைவாக ஏற்பட்ட குறைந்தளவு தொழில் உற்பத்தியும் விளங்குகின்றன.

கொவிட்-19 இரண்டாம் அலையின் காரணமாக 2021 மார்ச் மாதத்தின் குறியீட்டை விட 2021 ஏப்ரல் மாதத்தில் குறியீடு 15.1 சதவீதம் குறைந்துள்ளது.

***


(Release ID: 1723217) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Hindi