எரிசக்தி அமைச்சகம்

கொவிட் தொற்றுக்கு எதிரான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேசிய அனல் மின் கழகம் ஆதரவு

Posted On: 31 MAY 2021 3:32PM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் தேசிய அனல் மின் கழகமும் ஹசாரிபாகில் உள்ள பக்ரி பார்வாதி நிலக்கரி சுரங்க திட்டம், அதன் பெருநிறுவன சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக ராஞ்சியின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள ஐடிகேஐ காசநோய் சுகாதார நிலையத்தில் 300 படுக்கைகளுக்கு பிராணவாயு வசதியை ஏற்படுத்தித்தரவுள்ளது.

ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் 600  படுக்கைகளுக்கு பிராணவாயுவை வழங்கும் வசதிகளையும், 40 பிரம்மாண்ட சிலிண்டர்களையும் அமைப்பதற்கான நிதி உதவியையும் வழங்கி வருகிறது.

பிகாரி மருத்துவக் கல்லூரி, ஹசாரிபாக் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ரூ. 24 லட்சம் மதிப்பில் 180 படுக்கைகளுக்கு பிராணவாயு வசதியை வழங்க தேசிய அனல்மின் கழகத்தின் பக்ரி பார்வாதி நிலக்கரி சுரங்கத் திட்டம் முன்வந்துள்ளது.

மருத்துவ உபகரணங்கள், சேவைகள், பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சத்தீஸ்கரில் உள்ள தேசிய அனல்மின் கழகத்தின் தலையபள்ளி நிலக்கரி சுரங்க திட்டம், ராய்காட் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளது.

மாவட்ட சமூக சுகாதார மையங்களின் மருத்துவமனை கட்டிடங்களை புதுப்பித்தல், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு முழு உடல் கவசத்தை வழங்குதல், உள்ளூர் மக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723113

----



(Release ID: 1723183) Visitor Counter : 167