தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு (2026=100) - ஏப்ரல், 2021
प्रविष्टि तिथि:
31 MAY 2021 3:36PM by PIB Chennai
தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீடு (2026=100) - ஏப்ரல், 2021 வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் முக்கிய அம்சங்கள்
1. 2021 ஏப்ரல் மாதத்துக்கான தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு (2016=100) 120.1 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இது 119.6 புள்ளிகளாக இருந்தது.
2. துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, மாமிசம், முட்டை, சமையல் எண்ணெய், பழங்கள், தேயிலை, சலூன் கட்டணம், பூக்கள் விலை, ரயில் கட்டணம், மோட்டார் சைக்கிள் சர்வீஸ் கட்டணம், கேபிள் கட்டணம் போன்றவற்றின் விலையில் ஏற்றம் காரணமாக, நுகர்வோர் விலை குறியிட்டில் இந்த ஏற்றம் காணப்பட்டது.
3. 2021 ஏப்ரல் மாதத்துக்கான பணவீக்கம் 5.14 ஆக குறைந்தது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 5.64 சதவீதமாக இருந்தது. உணவு பணவீக்கமும், 4.78 சதவீதமாக குறைந்தது. இது முந்தைய மாதத்தில் 5.36 சதவீதமாக இருந்தது.
2021 ஏப்ரல் மாதத்தில் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு 0.5 புள்ளிகள் அதிகரித்து 120.1 ஆக உள்ளது. தற்போதைய பட்டியலில் அதிகபட்ச அழுத்தம், உணவு மற்றும் பானங்கள் நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளது. மொத்த மாற்றத்தில் இவற்றின் பங்களிப்பு 0.43 சதவீதமாக உள்ளது. மத்திய அளவில் ஜபல்பூரில் அதிகபட்சமாக 3.6 புள்ளிகளும், ராய்ப்பூர் மற்றும் பாவ் நகரில் முறையே 3.2 மற்றும் 3.1 புள்ளிகள் பதிவாகியுள்ளன.
உணவு மற்றும் பானங்கள், பான், பாக்கு, புகையிலை பொருட்கள், உடைகள், காலணி, வீடு, எரிபொருள், மற்றும் இதரவற்றின் நுகர்வோர் விலை குறீயீடுகளின் ஒப்பீட்டை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
2021 மே மாதத்துக்கான தொழிற்சாலை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறீயீடு ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும். இவற்றை www.labourbureaunew.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
சமீபத்திய குறியீடு குறித்து கருத்து தெரிவித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் திரு சந்தோஷ் கங்வர், ‘‘ நுகர்வோர் விலை குறியீட்டு உயர்வு மூலம் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723115
----
(रिलीज़ आईडी: 1723162)
आगंतुक पटल : 278