உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கொவிட் மருத்துவ பொருட்கள் விநியோகத்தில் அயராது பணியாற்றுகிறது சூரத் விமான நிலையம்

Posted On: 28 MAY 2021 4:15PM by PIB Chennai

கொவிட் மருத்துவ பொருட்களை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதை உறுதி செய்வதில் சூரத் விமான நிலையம் அயராது பணியாற்றுகிறது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில், 397 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 22 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 92 பார்சல் கொவிட் தடுப்பூசிகள் ஆகியவை சூரத் விமான நிலையத்தால் பாதுகாப்பாக கையாளப்பட்டது. சூரத்தில் ஆக்ஸிஜன் நிரப்புவதற்காக, காலி டேங்குகளை இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானங்கள் 5 முறை கொண்டு வந்தன. இதற்கான வசதிகளையும் விமான நிலையம் செய்தது.

பயணிகளுக்கு துரித கொவிட் பரிசோதனை மேற்கொண்ட முதல் விமான நிலையம் சூரத் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி திருவிழா மூலம் பயணிகள் உட்பட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் கொவிட் தடுப்பு விதிமுறைகளை சூரத் விமான நிலையம் கடுமையாக பின்பற்றி பயனிகளுக்கு பாதுகாப்பான, தடையற்ற விமான பயண வசதியை செய்து கொடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1722472

*****************


(Release ID: 1722530) Visitor Counter : 240