தேர்தல் ஆணையம்

கேரளாவில் மாநிலங்களவைக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

Posted On: 28 MAY 2021 3:29PM by PIB Chennai

கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஜோஸ் கே மணி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து 2021 ஜனவரி 11 முதல் அந்த இடம் காலியாக உள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 151 ஏ பிரிவின் படி, ஒரு இடம் காலியான 6 மாதத்திற்குள் அது நிரப்பப்பட வேண்டும்.

இதுகுறித்து இன்று ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 இரண்டாம் அலையால் நிலவும் சூழ்நிலையின் காரணமாக, இடைத்தேர்தலை தற்போது நடத்துவது உகந்ததாக இருக்காது என்று முடிவெடுத்தது.

நிலைமை சீரடைந்தவுடன் மேற்கண்ட இடைத்தேர்தல் நடத்தப்படும்.

மாநிலத்தில் இருந்து வரப்பெறும் தகவல்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலையை ஆய்வு செய்த பின்னர், இடைத்தேர்தல் நடத்துவது குறித்த முடிவை சரியான நேரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும்.

*****************


(Release ID: 1722504) Visitor Counter : 170
Read this release in: English , Urdu , Hindi , Malayalam