ஆயுஷ்

மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் மற்றும் ஆயுஷ் சஞ்ஜீவனி செயலியின் மூன்றாவது பதிப்பை ஆயுஷ் அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 27 MAY 2021 7:57PM by PIB Chennai

ஆயுஷ் துறையில் மற்றுமொரு மைல்கல்லாக, ஆயுஷ் மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் மற்றும் ஆயுஷ் சஞ்ஜீவனி செயலியின் மூன்றாவது பதிப்பை காணொலி முறையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார்.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி என்று கூறிய அமைச்சர், ஆயுஷ் மருத்துவ முறைகள் மிகவும் அறிவியல் பூர்வமானவை என்று கூறியதோடு, இன்று தொடங்கப்பட்டுள்ள இணையதளமும், செயலியும் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின் பங்களிப்பு குறித்த எதிர்மறை கருத்துகளை நீர்த்துப் போகச் செய்யும் என்று கூறினார்.

ஆயுர்வேதமா அல்லது அலோபதியா என்கிற விவாதத்தை சில ஊடகங்கள் தீவிர படுத்தியதாகவும் இது தேவையற்ற செயல் என்றும் அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆயுஷ் செயலளர் மருத்துவர் ராஜேஷ் கொட்டேச்சா, மிகப்பெரிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக இன்று தொடங்கப்பட்ட தளமும், செயலியும் அமைந்து இருப்பதாக கூறினார். "இவற்றின் உதவியோடு, ஆயுஷ் 64 மற்றும் கபசுரக் குடிநீர் குறித்த அறிவியல்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும்," என்று அவர் தெரிவித்தார்.

 ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில் ஆயுஷ் மருத்துவ தகவல் களஞ்சிய இணையதளம் (https://accr.ayush.gov.in/) அமைந்துள்ளது.

*****************


(Release ID: 1722280) Visitor Counter : 311