புவி அறிவியல் அமைச்சகம்

தீவிர காற்றழுத்தம் (யாஸ் புயலின் மிச்சம்) காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 27 MAY 2021 4:24PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் படி:

தெற்கு ஜார்கண்ட் மீது மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தம் (யாஸ் அதிதீவிர புயலின் மிச்சம்), மணிக்கு சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த ஆறு மணி நேரமாக வடக்கு நோக்கி நகர்ந்துகாற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது. இன்று (2021 மே 27) காலை இந்திய நேரப்படி 11.30 மணியளவில் ராஞ்சியிலிருந்து 20 கிலோமீட்டர் கிழக்கிலும் ஜம்ஷெட்பூரிலிருந்து 95 கிலோ மீட்டர் தென்மேற்கிலும் அது நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தமாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எச்சரிக்கைகள்:

(i) மழை: 

ஜார்கண்ட்: மே 27 அன்று பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

ஒடிசா: மே 27 அன்று வடக்கு உட்புற ஒடிசாவில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

*****************


(रिलीज़ आईडी: 1722187) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी