தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
யாஸ் புயல்: தொலைதொடர்பு மீது குறைந்த அளவு பாதிப்பு, புயல் எச்சரிக்கைக்காக தொலைதொடர்பு வசதிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2021 7:52PM by PIB Chennai
2021 மே 24 மற்றும் 25 அன்று, புயல் எச்சரிக்கை தகவல்களை இலவசமாக பகிர்வதற்காக தொலைதொடர்பு துறையின் பொது எச்சரிக்கை செயல்முறை மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை அமைப்புகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக 6 கோடி குறுந்தகவல்கள் உள்ளூர் மொழிகளில் அனுப்பப்பட்டன. இவற்றில் 3.87 கோடி மேற்கு வங்கத்திலும், 2.43 கோடி ஒடிசாவிலும், 36.4 லட்சம் ஆந்திராவிலும் அனுப்பப்பட்டன.
மேலும், தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து தொலைதொடர்பு துறையின் வாயிலாக அவுட்பவுண்டர் டயலர் உள்கட்டமைப்பை பயன்படுத்தி ஒலி வடிவ எச்சரிக்கை தகவல்களும் அனுப்பப்பட்டன.
60 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளூர் மொழிகளில் (மேற்கு வங்கத்தில் 36.5 லட்சம் மற்றும் ஒடிசாவில் 21.5 லட்சம்) தொடர்பு கொள்ளப்பட்டனர்.
ஆய்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டங்கள் தொலைதொடர்பு துறை செயலாளர் அளவில் புயலுக்கு முன்பும் இன்று காலை மற்றும் மாலையும் நடத்தப்பட்டன.
தொலைதொடர்பு நிறுவனங்கள் (ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் பிஎஸ்என்எல்), உள்கட்டமைப்பு நிறுவனங்கள் (ஏடிசி, இண்டஸ், அசெண்ட், டவர் விஷன் மற்றும் சம்மிட் டிஜிட்டல்) மற்றும் அவர்களது சங்கமான டாய்பா இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1721993)
வருகையாளர் எண்ணிக்கை : 225