சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சர்வதேச கொவிட் நிவாரண உதவிகளின் அண்மைத் தகவல்கள்
Posted On:
26 MAY 2021 3:36PM by PIB Chennai
கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன.
2021 ஏப்ரல் 27 முதல் மே 25 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் அனுப்பிய 17,831 பிராணவாயு செறிவூட்டிகள், 18,111 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 13,489 செயற்கை சுவாசக் கருவிகள், சுமார் 6.9 லட்சம் ரெமிடெசிவிர் குப்பிகள், 12 லட்சம் ஃபேவிபிரவிர் மாத்திரைகள் ஆகியவை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
2021 மே 24/25 அன்று வுல்ஃப்ஸ்பெர்க் (ஜெர்மனி), குவைத் ( இண்டியன் கம்யூனிட்டி அண்ட் ரெட் கிரஸெண்ட் சொசைட்டி), பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனி (இங்கிலாந்து), அமெரிக்க இந்திய கூட்டு மன்றம், சிஐஐ இந்திய வர்த்தக மன்றம் (தென்னாப்பிரிக்கா), வேர்ல்டு இன் ஹார்மனி அரசு சாரா நிறுவனம் (ஸ்பெயின்), இந்திய தூதரகம் (மேட்ரிட்) ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட முக்கியப் பொருட்கள்:
• பிராணவாயு செறிவூட்டிகள்: 76
• பிராணவாயு சிலிண்டர்கள்: 1,810
• செயற்கை சுவாசக் கருவிகள்: 40
பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வழங்கப்படும் பொருட்கள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் துரிதகதியில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனை பிரத்தியேக ஒருங்கிணைப்பு மையத்தின் வாயிலாக மத்திய சுகாதார அமைச்சகம் விரிவாகக் கண்காணித்து வருகின்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721877
----
(Release ID: 1721913)
Visitor Counter : 252