பாதுகாப்பு அமைச்சகம்

ஆந்திராவின் பலாசா நகரில் உள்ள கொவிட் சிகிச்சை மையத்துக்கு நடமாடும் ஆக்ஸிஜன் ஆலையை வழங்கியது இந்திய கடற்படை

Posted On: 26 MAY 2021 10:42AM by PIB Chennai

ஆந்திராவின் பலாசா நகரில் உள்ள கொவிட் சிகிச்சை மையத்துக்கு நடமாடும் ஆக்ஸிஜன் ஆலையை இந்திய கடற்படை வழங்கியுள்ளது.

ஆந்திரப்பிரதேசம் ஸ்ரீகாக்குளம் மாவட்ட ஆட்சியர் திரு ஜே.நிவாஸ் விடுத்த வேண்டுகோள் அடிப்படையில், பலாசா நகரில் உள்ள கொவிட் சிகிச்சை மையத்துக்கு நடமாடும் ஆக்ஸிஜன் ஆலையை இந்திய கடற்படை மே 25ம் தேதி வழங்கியது. இந்த ஆக்ஸிஜன் ஆலை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டு பலாசா கொவிட் சிகிச்சை மையத்தில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.

இதை  கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு சீதிரி அப்பலராஜூ, துணை ஆட்சியர் திரு சூரஜ் கனோர் மற்றும் கடற்படை குழுவின் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.   

இந்த நடமாடும் ஆக்ஸிஜன் ஆலை, பலாசா கொவிட்  சிகிச்சை மையத்தின் ஆக்ஸிஜன் பைப்புகளுடன் இணைக்கப்பட்டது. இதற்கு விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தின் நிபுணர்கள் உதவினர்இந்த ஆக்ஸிஜன் ஆலையால், மருத்துவமனையில் உள்ள 12 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகிக்க முடியும்.

இந்த ஆக்ஸிஜன் ஆலையை இயக்குவது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நடமாடும் ஆக்ஸிஜன் ஆலை உருவாக்கப்பட்டது, கடற்படை கப்பல் கட்டும் தளத்தின் தனித்துவமான முயற்சிஇதில் பிஎஸ்ஏ ஆக்ஸிஜ் ஆலை, ஒரு வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதை தொலை தூரங்களில் உள்ள மருத்துமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்க கொண்டு செல்லலாம். இந்த நடமாடும் ஆக்ஸிஜன் ஆலையை, விசாகப்பட்டினத்தில், கடற்படையின் கிழக்கு கட்டுப்பாட்டு மண்டல தலைவர் வைஸ் அட்மிரல் .பி.சிங் கடந்த 20ம் தேதி வழியனுப்பி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721810

-----



(Release ID: 1721869) Visitor Counter : 239