விவசாயத்துறை அமைச்சகம்

2020-21-ம் ஆண்டில் 305.44 மில்லியன் டன் உணவு தானியங்கள் நாட்டில் விளைவிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

Posted On: 25 MAY 2021 7:12PM by PIB Chennai

2020-21-ம் ஆண்டுக்கான முக்கிய வேளாண் பயிர்களின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ளது.

உணவு தானியங்களின் மொத்த விளைச்சல் சாதனை அளவாக 305.44 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், “இந்த நேர்மறை அறிகுறி நமது விவசாய சகோதர, சகோதரிகளின் ஓய்வற்ற உழைப்பின் பலன்களாகும்,” என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், வேளாண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு, இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் கவனம் வேளாண் துறையின் வளர்ச்சியின் மீதிருப்பதாக அமைச்சர் கூறினார்.

-----(Release ID: 1721767) Visitor Counter : 38


Read this release in: Telugu , English , Urdu , Hindi