சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
‘‘கொவிட்-19 நெருக்கடி நேரத்தில் சுகாதார சேவைகளை தொடர்வது’’ குறித்த உயர்நிலை குழு விவாதத்தில் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்பு
Posted On:
25 MAY 2021 7:04PM by PIB Chennai
‘‘கொவிட்-19 நெருக்கடி நேரத்தில் சுகாதார சேவைகளை தொடர்வது’’ குறித்த உயர்நிலை குழு விவாதத்தில் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று பங்கேற்றார். இதில் ஐ.நா அமைப்பின் துணை பொதுச் செயலாளர் திரு நிகில் சேத் உட்பட சர்வதேச பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கொவிட்-19 நெருக்கடி நேரத்தில், தொற்று அற்ற நோய்களுக்கும் தடையற்ற சுகாதார சேவை கிடைக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, இந்நிகழ்ச்சியை நடத்தும் ஐ.நா.வின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டு தெரிவித்தார். இந்த கொவிட் தொற்று நெருக்கடி நேரத்தில், தொற்று அற்ற நோய்களுக்கும் தொடர்ந்து சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. உலக நோய்களில், தொற்று அற்ற நோய்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் 41 மில்லியன் பேர் இறக்கின்றனர். இது உலகின் மொத்த இறப்பில் 70 சதவீதமாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பில் கொவிட்-19 மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், ‘‘கொவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சைகளின் தேவை, இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்துவதில் நமது சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மூழ்கியுள்ளனர். இதன் காரணமாக, மக்கள் எதிர்பார்க்கும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் சமரசம் செய்யப்படுகிறது’’ என கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721688
----
(Release ID: 1721758)
Visitor Counter : 227