பாதுகாப்பு அமைச்சகம்

மேற்கு வங்கத்தில் யாஸ் புயலுக்கு உதவ ராணுவம் தயார்நிலை

Posted On: 25 MAY 2021 6:38PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மண்டலம் தயார் நிலையில் உள்ளது.

யாஸ் புயல் நாளை கரை கடக்கிறது. மேற்கு வங்க அரசு விடுத்த வேண்டுகோள் அடிப்படையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் மாநில அரசுடன் இணைந்து செயல்பட கிழக்கு மண்டலத்தில் உள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

புயல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள், சிறப்பு வீரர்கள் அடங்கிய 17 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் புருலியா, ஜர்கிராம், பிர்பும், பர்தாமன், மேற்கு மிட்னாபூர், ஹவுரா, ஹூக்ளி, நாடியா, 24 பரகனாஸ் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் அனுப்பப்பட்டுள்ளனர்.  

8 புயல் நிவாரண குழுக்கள், கொல்கத்தாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், இவர்கள் மேற்கு வங்கத்தில் உடனடியாக ஈடுபடுத்தப்படுவர்

புயல் பாதிப்பில் சிக்குபவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், சாய்ந்து விழும் மரங்களை வெட்டி அகற்றவும், இந்த குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721678

----



(Release ID: 1721749) Visitor Counter : 207


Read this release in: English , Urdu , Hindi , Telugu