மத்திய பணியாளர் தேர்வாணையம்

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I), 2020-இன் இறுதி முடிவுகள் வெளியீடு

Posted On: 24 MAY 2021 5:15PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I), 2020-இன் முடிவுகள்பாதுகாப்பு அமைச்சகத்தின் சேவைகள் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்முக தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2021 ல் தொடங்க உள்ள சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 113-வது குறுகியகால ஆணைய பயிற்சி (ஆண்களுக்கு), சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 27-வது குறுகியகால ஆணைய பெண்கள் பயிற்சியில் (தொழில் நுட்பம் சாராத) சேர்வதற்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்திய ராணுவ பயிற்சி மையம், டேராடூன், கடற்படை பயிற்சி மையம், எழிமலா, கேரளா மற்றும் விமானப்படை பயிற்சி மையம், ஹைதராபாத்தில் பயிற்சி செய்வதற்கு இதே தேர்வின் முடிவுகளை மையமாகக்கொண்டு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்களும் 113-வது குறுகியகால ஆணைய பயிற்சியில் (ஆண்களுக்கு), இடம் பெற்றுள்ளன.

அரசு தெரிவித்துள்ளபடி 113-வது குறுகியகால ஆணைய பயிற்சியில் (ஆண்களுக்கு) 225 காலி இடங்களும், 27-வது குறுகியகால ஆணைய பெண்கள் பயிற்சியில் (தொழில் நுட்பம் சாராத) 16 காலி இடங்களும் உள்ளன.

விண்ணப்பதாரர்களை தேர்வு செய்கையில் அவர்களது மருத்துவ பரிசோதனை முடிவு கருத்தில் கொள்ளப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானதே. விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி மற்றும் கல்வித்தகுதி ராணுவ தலைமையகத்தால் உறுதி செய்யப்படும்.

http://www.upsc.gov.in என்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் முடிவுகள் பற்றி  தெரிந்துக் கொள்ளலாம். எனினும் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் 30 நாட்கள் வரையில் ஆணையத்தின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும்.

தேர்வு முடிவுகளை இங்கே காணலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/may/doc202152431.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721300

 

*****************



(Release ID: 1721358) Visitor Counter : 213