பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

நாட்டிலுள்ள அனைத்து வளரத் துடிக்கும் மாவட்டங்களின் பழங்குடி குழுக்களில் வன் தன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டிரைஃபெட் மற்றும் நிதி ஆயோக் இணைய உள்ளன

Posted On: 24 MAY 2021 4:10PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமரின் தற்சார்பு இந்தியா அறைகூவல் மற்றும் "உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் அளிப்போம், பழங்குடியினரின் பொருட்களை வாங்குவோம்" எனும் தாரக மந்திரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, "அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும்" எனும் லட்சியத்தை அடையும் விதத்தில் வளரத் துடிக்கும் மாவட்டங்கள் என்று நிதி ஆயோக்கால்  அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் வன் தன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக டிரைஃபெட் மற்றும் நிதி ஆயோக் இணைய உள்ளன.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் மற்றும் டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திரு பிரவிர் கிருஷ்ணா ஆகியோரிடையே சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து 39 பழங்குடியின வளரத் துடிக்கும் மாவட்டங்களில் வன் தன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த திட்டத்தை நிதி ஆயோக் குழு வகுக்கும்.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இம்மாவட்டங்கள் அமைந்துள்ளன.

 இந்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஜூன் முதல் வாரத்தில் காணொலி கூட்டமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காடுகளில் உற்பத்தியாகும் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலை முறையில் சந்தைப்படுத்துதல், வன பொருட்களை சேகரிப்பவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்தல் மற்றும் பழங்குடியினர் குழுக்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிரைஃபெட்டின் நடவடிக்கைகளாகும். இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைக்கிறது.

 

 *****************


(Release ID: 1721338)