பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகத்தின் புதிய மின்னணு வசதிகள் : மத்திய நிதித்துறை இணையமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 24 MAY 2021 3:42PM by PIB Chennai

மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகத்தின் மாற்றியமைக்கப்பட்ட இணையதளம், புதிய இ-மெயில் சேவைகள் உட்பட புதிய வசதிகள் அடங்கிய எம்சிஏ21 3.0வின் முதல் கட்டத்தை மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை இனண அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

இந்த எம்சிஏ தொகுப்பில் மின்னணு புத்தகம், மின்னணு ஆலோசனை போன்ற வசதிகளும் உள்ளது. இந்நிகழ்ச்சியில் கம்பெனிகள் விவகாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் வர்மா கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தியா பொருளாதார சக்தி மையமாக மாற வேண்டும் என்ற பிரதமரின் கனவை நனவாக்க, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை நாம்  அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் நமது தொழில் நிறுவனங்களும் இணைவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வர்த்தக நிறுவனங்களும், மத்திய அரசை நட்பு அடிப்படையிலான பங்குதாரராக பார்க்க வேண்டும். 

இதற்கு இந்த மின்னணு ஆலோசனை தொகுப்பு உதவும்:

* காணொலி ஆலோசனைக்கான திருத்தங்கள், புதிய சட்டங்களை கம்பெனிகள் விவகாரத்துறை அவ்வப்போது அறிமுகம் செய்யும்.

* கொள்கை முடிவுகளை விரைவாக எடுப்பதற்கு, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்கப்படும். 

* கம்பெனிகள் விவகாரத்துறை அதிகாரிகளுக்கு தொடங்கப்பட்டுள்ள புதிய மின்-அஞ்சல் சேவை மேம்பட்ட அம்சங்களை வழங்கும் அனைத்து தரப்பினருடன்  தகவல் தொடர்பு திறன்களை அதிகரிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721263

*****************



(Release ID: 1721298) Visitor Counter : 278