சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரண மருத்துவ பொருட்களின் விவரம்
Posted On:
21 MAY 2021 3:50PM by PIB Chennai
சர்வதேச நாடுகள் / அமைப்புகள் அனுப்பும் கொவிட்-19 நிவாரண மருத்துவ பொருட்கள் மற்றும் சாதனங்களை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது. இவை பல மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மாதம் 27ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை, மொத்தம் 15,567 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் ஆலைகள், 10,950 வென்டிலேட்டர்கள், 6.6 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் சாலை மார்க்கமாகவும், வான்வழியாகவும் அனுப்பப்பட்டன.
கடந்த 19 / 20ம் தேதிகளில், இங்கிலாந்து, கத்தார், ஆன்டாரியோ(கனடா), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்பெயின், யுஎஸ்ஐஎஸ்பிஎப், ஜிலீட், எலி லில்லி, இந்தியா-டென்மார்க் வர்த்தக சபை ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட முக்கிய பொருட்கள் விவரம்:
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் - 2,474
வென்டிலேட்டர்கள் - 526
ரெம்டெசிவிர் - 27,356
பாரிசிடினிப் - 1, 09, 172
ஃபவிபிராவிர் - 104 பெட்டிகள்
இவற்றை திறம்பட ஒதுக்கீடு செய்து, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இவற்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாக கண்காணித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720603
*****************
(Release ID: 1720697)
Visitor Counter : 221