பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

தினசரி நான்காயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை எஃகு ஆலைகள் தொடர்ந்து விநியோகித்து வருகின்றன - நேற்று மட்டும் இந்த அளவு 4435 மெட்ரிக் டன்னை எட்டியது


கொவிட் பராமரிப்பு மையங்களில் 12,000 ஆக்சிஜன் படுக்கைகளை பெட்ரோலியம் மற்றும் எஃகு துறை நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன

Posted On: 18 MAY 2021 4:54PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் துறையை சேர்ந்த எஃகு ஆலைகள் உயிர்காக்கும் திரவ மருத்துவ ஆக்சிஜனை தொடர்ந்து விநியோகித்து வருகின்றன. எஃகு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானின் வழிகாட்டுதலின் படி, கொவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அவை எடுத்துள்ளன.

பெட்ரோலியத் துறையுடன் இணைந்து, ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவில், நாட்டின் திரவ மருத்துவ ஆக்சிஜன் தேவையில் பெரும்பங்கை அவை பூர்த்தி செய்து வருகின்றன. 2021 ஏப்ரல் 1 அன்று ஒரு நாளைக்கு 538 மெட்ரிக் டன்னாக இருந்த எஃகு ஆலைகளின் திரவ மருத்துவ ஆக்ஸஜன் விநியோகம், ஒரு நாளைக்கு நான்காயிரம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. மே 16 அன்று 4314 மெட்ரிக் டன் உற்பத்தி செய்திருந்த நிலையில் மே 17 அன்று இந்த அளவு 4435 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் ஆக உயர்ந்தது. செயிலில் இருந்து 1485 மெட்ரிக் டன், ஆர் என் எல்லில் இருந்து 158 மெட்ரிக் டன், டாட்டாவில் இருந்து 1154 மெட்ரிக் டன், எம் என் எஸ்ஸில் இருந்து 238 மெட்ரிக் டன், ஜே எஸ் டபிள்யுவில் இருந்து 1162 மெட்ரிக் டன் இதில் அடங்கும்.

திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எஃகு ஆலைகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன.

பெட்ரோலியம் துறையைப் பொருத்தவரை, தினசரி 1150 திரவ மருத்துவ ஆக்சிஜனை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பானிப்பட் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கொச்சி மற்றும் பினாவில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகள் வழங்கி வருகின்றன. சுகதார சவால்களை சிறப்பான முறையில் எதிர்கொள்வதற்காகவும் உயிர்களை காப்பாற்றுவதற்காகவும் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எஃகு நிறுவனங்கள் தொடங்க எடுத்து வருகின்றன.

தீவிர சிகிச்சை மற்றும் அவசரகால மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள கொவிட் பராமரிப்பு மையங்களில் 12,000 ஆக்சிஜன் படுக்கைகளை போர்க்கால அடிப்படையில் பெட்ரோலியம் மற்றும் எஃகு துறை நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன. தனது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் 8,500 ஆக்சிடென்ட் படுக்கைகளை நிறுவும் பணியில் எஃகு துறை ஈடுபட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பினா சுத்திகரிப்பு ஆலை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலை, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பொது சுத்திகரிப்பு ஆலை, எச் எம் எல் பதிந்தா சுத்திகரிப்பு ஆலை மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சென்னை சுத்திகரிப்பு ஆலை ஆகியவற்றில் உருவாக்கப்பட்டு வரும் இத்தகைய வசதிகளின் மூலம் திரவ மருத்துவ ஆக்சிஜன் நீண்ட தூரம் எடுத்துச் செல்வது தவிர்க்கப்படும். கொச்சி மற்றும் பானிபட் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ஹிஸார் எஃகு ஆலையில் கொவிட் பராமரிப்பு மையங்கள் சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

***


(Release ID: 1719718) Visitor Counter : 252