பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்முவில் உள்ள சோப்ரா மருத்துவமனை 100 படுக்கைகளுடன் விரைவில் செயல்படும்: அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 16 MAY 2021 7:02PM by PIB Chennai

ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட சோப்ரா மருத்துவமனை 100 படுக்கை வசதிகளுடன் விரைவில் செயல்பட தொடங்கும் என வடகிழக்கு பகுதி மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில், கொவிட் பாதிப்பு அதிகரித்ததால், அங்குள்ள மருத்துவமனைகளில் கொவிட் சிகிச்சைக்கான தயார்நிலை குறித்து கடந்த சில நாட்களாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இன்று நடத்திய கூட்டத்தில், ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட சோப்ரா மருத்துவமனை 100 படுக்கைகளுடன், விரைவில் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 3 ஆக்ஸிஜன் ஆலைகள் உள்ளதாகவும், தற்போது கூடுதலாக 2 ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இங்குள்ள 1111 படுக்கைகளில், 893 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இங்குள்ள 1111 படுக்கைகளிலும், ஆக்ஸிஜன் வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முடிவு செய்தபடி, இங்கு ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் தணிக்கை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்  நலநதியின் கீழ் வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அவற்றில் ஏதேனும், செயல்படாமல் இருந்தால், பழுதுகள் உடனடியாக   சரிசெய்யப்படவுள்ளன.  

ஏற்கனவே முடிவு செய்தபடி, இங்குள்ள மருத்துவமனைகளில், இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் கொவிட் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மேம்படும், அவர்களின் உறவினர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719167

*****************(Release ID: 1719203) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Punjabi