ரெயில்வே அமைச்சகம்

கொவிட் சவால்கள் இருந்தபோதும் கொல்கத்தாவில் 800 மீட்டர் சுரங்கப்பாதை பணியை முடித்தது ரயில்வே

Posted On: 16 MAY 2021 1:59PM by PIB Chennai

கொல்கத்தாவின் போபஜார் பகுதியில், கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தின் சுரங்கப் பாதை பணி நேற்று முடிவடைந்தது. இங்கு உர்விஎன்ற இயந்திரம் மூலம்  சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழித்தடத்தில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பல கட்டிடங்கள் இருப்பதால், இங்கு சுரங்கப்பாதை அமைப்பது மிகவும் சிக்கலான பணியாக இருந்தது. தொற்று சூழலில், கொவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி 800 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் சவாலான பணி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

உர்விஎன்ற சுரங்க இயந்திரம் மூலம் கிழக்கு நோக்கி எஸ்பிளனேடு முதல் சீல்டா வரை சுரங்கப்பாதை தோண்டும் பணி கடந்தாண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. அதன்பின்  மேற்கு நோக்கி சீல்டா முதல் போபஜார் வரை 800 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டு பணி தொடங்கப்பட்டது.

சீல்டா பாலத்துக்கு கீழ் உர்வி இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை தோண்டும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக, பாலத்துக்கு மேல் வாகன போக்குவரத்து 3 நாட்கள் நிறுத்தப்பட்டது.

சுரங்கப் பாதை தோண்டும் பணி முடிந்த பிறகு, இதற்காக பயன்படுத்தப்பட்ட உர்விமற்றும் சாண்டிஎன்ற இயந்திரங்கள் தனித்தனியாக பிரித்து அகற்றப்படும். அதன்பின் சுரங்கப் பாதைக்குள் கான்கிரீட் அமைக்குப்பணி உட்பட இதர பணிகள் மேற்கொள்ளப்படும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719055

*****************



(Release ID: 1719160) Visitor Counter : 135