பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட் நிவாரணப் பொருட்களை இரண்டாம் முறையாக தமது நாடாளுமன்ற தொகுதியான உதம்பூர்-கத்துவா-தோடாவுக்கு மத்திய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் அனுப்பி வைத்தார்

प्रविष्टि तिथि: 15 MAY 2021 5:18PM by PIB Chennai

கொவிட் நிவாரணப் பொருட்களை இரண்டாம் முறையாக தமது நாடாளுமன்ற தொகுதியான உதம்பூர்-கத்துவா-தோடாவுக்கு வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று அனுப்பி வைத்தார்.

80,000 முகக்கவசங்கள், 1,000 கை கிருமி நாசினிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமது கொவிட் தொற்று குணமாகிவிட்டதென்று தெரிய வந்த அன்றே முதல் முறையாக உதவி பொருட்களை தமது தொகுதிக்கு அனுப்பி வைத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

தம்மால் முடிந்த அளவுக்கு இன்னும் பொருட்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்த டாக்டர் சிங், தேவைக்கேற்ப பல்வேறு இடங்களில் இருந்து பொருட்களை பெற்று அவற்றை தொகுதி முழுவதும் விநியோகித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தேவையை பொருத்து பொருட்களை சிறப்பான முறையில் விநியோகிக்குமாறு நமது நாடாளுமன்ற அலுவலக பணியாளர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கட்சி பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

*****************


(रिलीज़ आईडी: 1718932) आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi