பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட் தடுப்பு நடவடிக்கையில் மக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது: டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 14 MAY 2021 5:44PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர்-கதுவா-தோடா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுடன், கொவிட் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

கொவிட் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவ மற்றும் நிர்வாக நடவடிக்கைளுடன், மக்களின் நடவடிக்கைகள் மற்றும் ஒத்துழைப்பும் சமஅளவில் இன்றியமையாதது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பீதியடையாமல் இருப்பது ஆகியவை இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானது. அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை தேவையில்லாமல் வாங்கி பதுக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை சமுதாய தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பதுக்குவது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்.

கதுவா, உதம்பூர், தோடா, ரம்மன் மற்றும் கிஸ்த்வர் ஆகிய பகுதிகளில் ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது திருப்தி அளிக்கிறது. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களை தணிக்கை செய்வது, ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு அவைகள் சம அளவில் கிடைப்பதை உறுதி செய்யும். 

கொவிட் தடுப்பூசி போடுவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எனது தொகுதிக்கு இந்த வாரம், ஒரு டிரக்கில் கொவிட் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. 2வது கட்ட நிவாரணப் பொருட்கள் அடுத்த வாரம் அனுப்பிவைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718642

*****************


(Release ID: 1718685)