கலாசாரத்துறை அமைச்சகம்

கலாச்சார பரிமாற்ற திட்டங்கள் குறித்து மங்கோலிய அமைச்சருடன், மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் ஆலோசனை

Posted On: 13 MAY 2021 6:12PM by PIB Chennai

கலாச்சார பரிமாற்ற திட்டத்தின் கீழ் பல விஷயங்கள் குறித்து மங்கோலிய கலாச்சாரத்துறை அமைச்சர் திருமிகு சின்பட் நொமினுடன், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு மே மாதம், மங்கோலியா சென்றபோது, ஏற்படுத்தப்பட்ட கூட்டுறவு உத்திகளை மேலும் தொடரவும், வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தியா-மங்கோலியா இடையேயான கலாச்சார பரிமாற்ற திட்டம் 2023ம் ஆண்டு வரை புதுப்பிக்கப்படுவதால், சில குறிப்பிட்ட துறைகளில்  ஒத்துழைப்பு குறித்து இருதரப்பு கலாச்சாரத்துறை மூத்த அதிகாரிகள் ஆலோசிக்கவுள்ளனர். 

தொற்று காலத்தில், உலன்பதாரில் உள்ள முன்னணி மடங்களில், இந்தியாவுக்காக  சிறப்பு பிராத்தனை நடத்தியதற்காக, திருமிகு. நொமினிடம், அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் நன்றி தெரிவித்தார்.

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு மங்கோலியா துணை நிற்பதாக திருமிகு. நொமின் தெரிவித்தார்.

இந்தியாவில் திபெத் புத்தமதம் பற்றி படிப்பதற்காக மங்கோலியாவுக்கு 10 பிரத்தியேக கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார்.

கண்டன் மடாலயத்தில், புத்தமத ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க இந்திய உறுதிபூண்டுள்ளதாகவும் திரு பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார்.

மங்கோலியாவில் கண்காட்சி மற்றும் நூலகம் அமைக்க உதவும்படி மங்கோலியா விடுத்த வேண்டுகோளை இந்தியா பரிசீலிக்கும் என அமைச்சர்  தெரிவித்தார்.

மங்கோலியாவில் உள்ள புத்த துறவிகள் இந்தியாவில் பயணம் செய்வதற்கான விசா வழங்க இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளையும் திரு. பிரகலாத் சிங் படேல் விளக்கினார். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான கலாச்சார உறவு குறித்து இரு தரப்பிலும் திருப்தி தெரிவிக்கப்பட்டது.

*****************


(Release ID: 1718405) Visitor Counter : 211


Read this release in: English , Urdu , Hindi , Punjabi