தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
கோவிஷீல்ட் தடுப்பு மருந்து வழங்கலுக்கான முதல் தடுப்பூசி முகாம் தொழிலாளர் அலுவலகம், சண்டிகரில் நடைபெற்றது
Posted On:
11 MAY 2021 6:29PM by PIB Chennai
தனது வளாகத்திலுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பு மருந்து வழங்குவதற்கான முதல் தடுப்பூசி முகாமை தொழிலாளர் அலுவலகம், சண்டிகர், இன்று நடத்தியது.
இந்த முகாமில், அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. சண்டிகர் சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அனைத்து தொழிலாளர் அலுவலக குடும்பத்தினரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த தொழிலாளர் அலுவலக தலைமை இயக்குநர் திரு டி பி எஸ் நெகி, தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இதன் மூலம் தனிநபர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் பாதுகாக்கப் படுவதாக அவர் கூறினார்.
தடுப்பூசி குறித்த சந்தேகங்களை புறந்தள்ளிய அவர், தடுப்பூசி போட்டுக் கொள்வது பெரிய சமூகக் கடமை என்றும், ஏனென்றால் அதன் மூலம் தற்போதைய முக்கியத் தேவையான தொற்று சங்கிலி உடைகிறது என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717741
----
(Release ID: 1717811)
Visitor Counter : 212