ஜல்சக்தி அமைச்சகம்

வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் வசதி இருக்கும் யூனியன் பிரதேசமானது புதுச்சேரி

Posted On: 10 MAY 2021 6:35PM by PIB Chennai

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதன் மூலம், வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு இருக்கும்  யூனியன் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளதுஇதன் மூலம் கோவா, தெலங்கானா, மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அடுத்தபடியாக, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் குழாய் இருக்கும் 4வது மாநிலம்/யூனியன் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளது

கொவிட்-19 தொற்று சவால்களுக்கு இடையிலும், மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, ஜல் ஜீவன் திட்டம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது

2024ம் ஆண்டுக்குள், அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு  வழங்குவதுதான் இத்திட்டத்தின் இலக்கு.

புதுச்சேரியின் சாதனை, ஜல் ஜீவன் திட்டம் வெற்றிக்கு மற்றொரு உதாரணம். இதன் மூலம் கிராமங்களில் உள்ள மக்கள், வீட்டில் கைக் கழுவும் பழக்கத்தை பின்பற்ற முடியும். பொது குழாய்களில் கூட்டத்தை தவிர்த்து சமூக இடைவெளியை பராமரிக்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, இந்த சாதனை தாமதமானாலும், புதுச்சேரி நிர்வாகத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

புதுச்சேரியில் உள்ள 1.16 லட்சம் கிராம வீடுகளில் தற்போது குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. இலக்கு காலத்துக்கு முன்பே, வீட்டுக்கு வீடு குழாய் இணைப்பு  அந்தஸ்தை புதுச்சேரி சாதித்துள்ளது.

புதுச்சேரி தற்போது, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க திட்டமிட்டு வருகிறது. நீர்வள நிலைத்தன்மையை நோக்கி புதுச்சேரி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717483

-------


(Release ID: 1717543) Visitor Counter : 279