நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

அவுரங்காபாத் மற்றும் அமராவதியில் இருக்கும் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகங்கள் உடனடியாக செயல்பட தொடங்கும்: திரு ராவ் சாகேப் டான்வே

Posted On: 10 MAY 2021 5:53PM by PIB Chennai

மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் மற்றும்  அமராவதியில் இருக்கும் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகங்கள் உடனடியாக செயல்பட தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் திரு ராவ் சாகேப் டான்வே இன்று அறிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மராத்வாடா மற்றும் மேற்கு விதர்பா பகுதிகளில்

செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக இந்த அலுவலகங்கள் தங்களது பணிகளை தொடங்கும் என்றும் அவர்  கூறினார்.

மேலும் பேசிய திரு டான்வே, "விவசாயிகள், பொது விநியோக திட்ட பயனாளிகள், தொண்டு நிறுவனங்கள், அரசுகள் மற்றும் மராத்வாடா மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள நுகர்வோர்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இதன் மூலம் பயன் அடைவார்கள். இந்த அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் இந்திய உணவுக் கழகத்தின் தொடர்புடைய மண்டல அலுவலகங்களை நேரடியாக தொடர்பு கொண்டு பணிகளை சிறப்பாக முடிக்க முடியும்," என்றார்.

"தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய உணவு கழகத்தில் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியத்துவமானது," என்று இணை அமைச்சர் மேலும் கூறினார்.

"மத்திய நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகம் ரயில்வே மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் காட்டியுள்ள "அனைவருடனும் அனைவரின் நன்மைக்காகவும் அனைவரின் நம்பிக்கையுடனும்" எனும் வழியில் இத்துறை தொடர்ந்து பயணிக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

**



(Release ID: 1717542) Visitor Counter : 155