ஆயுஷ்

திங்கட்கிழமை முதல் தில்லியின் 7 பகுதிகளில் ஆயுஷ் 64 மருந்தின் இலவச விநியோகம்

Posted On: 09 MAY 2021 4:06PM by PIB Chennai

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத கொவிட் நோயாளிகளுக்கு, தில்லியின் பல்வேறு பகுதிகளில் ஆயுஷ் 64 மருந்தை இலவசமாக வழங்கும் பணி கடந்த சனிக்கிழமையன்று தொடங்கியது.

திங்கட்கிழமை முதல் மேலும் பல மையங்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் அல்லது அரசு/அரசு சாரா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட தனிமைப்படுத்தும் மையங்களில் இருப்பவர்கள், ஆயுஷ் அமைச்சகத்தின் இந்த முன்முயற்சியால் பயனடையலாம்.

அறிகுறியற்ற, லேசான மற்றும் மிதமான கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆயுஷ் 64 மருந்தை வழங்குவதற்காக தில்லியில் ஏழு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நோயாளிகள் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவையும், ஆதார் அட்டையையும் பயன்படுத்தி ஆயுஷ் 64 மாத்திரைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.‌

இதுதவிர ஆயுஷ் பவன் வளாகத்தின் வரவேற்பு கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விற்பனை அரங்கிலும் ஆயுஷ் 64 மற்றும் ஆயுரக்ஷா கிட்களை  பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717242

*****************


(Release ID: 1717251) Visitor Counter : 244