பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படை கொவிட் விமான உதவி மேலாண்மை பிரிவு (CASMC) செயல்பாடுகள்

Posted On: 09 MAY 2021 3:35PM by PIB Chennai

கொவிட் விமான உதவி மேலாண்மை பிரிவை, பாலம் விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படை கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் இயக்கி வருகிறது. 

வெளிநாடுகளில் இருந்து வரும் கொவிட் நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கு, திறம்பட ஒருங்கிணைந்து செயல்படுவதுதான் இந்தப் பிரிவின் முக்கியப்பணி. 

இந்தப் பிரிவு 24 மணி நேரமும் செயல் படுகிறது. ஆட்கள், சாதனங்களை ஏற்றி இறக்குதல் மற்றும் சமதள ட்ரெய்லர் வாகனங்கள், சரக்குகளை தூக்கும் வாகனங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பொருட்களை கொண்டுச் செல்ல, ஒரு சி-130 விமானம் மற்றும் இரண்டு ஏஎன்-32 போக்குவரத்து விமானம் ஆகியவை பாலம் விமானப்படை தளத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி முதல் செயல்படுகிறது.

பல தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்பட, அவசரமாக பொருட்களை கொண்டு செல்வதற்கான ஒத்திகை கடந்த ஏப்ரல் 29ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. 

தடையற்ற தகவல் தொடர்பு மற்றும் கால தாமதத்தை குறைக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை, கொவிட் செயலாளர், இந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம்  போன்றவற்றுடன் தகவல் தொடர்பு இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுங்கத்துறை மற்றும் சேமிப்பு கிடங்கு தொடர்பான பிரச்னைகளை ஒழுங்குமுறைப்படுத்த தில்லி சர்வதேச விமானநிலைய நிறுவனம், ஏர் இந்தியா சாட்ஸ் மற்றும் விமானப்படை இயக்கம் தொடர்பு பிரிவு ஆகியவற்றுடன் கூட்டம் நடத்தப்பட்டது.

*****************



(Release ID: 1717250) Visitor Counter : 197