புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி அமைச்சகம், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்காக மிகப்பெரும் தடுப்பூசி முகாமை நடத்துகிறது தேசிய நீர்மின் கழகம்

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2021 9:00AM by PIB Chennai

மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இணை அமைச்சரும், (தனி பிரிவு) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவின் இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங்கின் உத்தரவின் பேரில்தில்லி/தேசிய தலைநகர் பகுதியில் எரிசக்தி அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பிரம்மாண்ட திட்டத்தை தேசிய நீர்மின் கழகம் மேற்கொண்டு வருகிறது.

24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படுவதற்காக, எரிசக்தித் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தில்லி அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து நேற்று (மே 7, 2021),  மின்சக்தி அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் 117 பேருக்கு (18-44 வயது வரையிலானோர்) கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டதுமேலும் பல ஊழியர்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் இன்றுவரை (மே 8 2021) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716967

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1717022) வருகையாளர் எண்ணிக்கை : 287
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu