பாதுகாப்பு அமைச்சகம்

உள்ளூர் நிர்வாகத்துக்கு உதவுவதில் ஒருங்கிணைந்து செயல்பட கொவிட் மேலாண்மை பிரிவை ஏற்படுத்தியது இந்திய ராணுவம்

Posted On: 06 MAY 2021 6:29PM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கையில், இந்திய ராணுவம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. ராணுவம் தனது சொந்த படையினரின் பாதுகாப்பு, வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் அதே வேளையில், உள்ளூர் நிர்வாகத்துக்கும் கணிசமான மருத்துவ உதவிகளை அளித்து வருகிறது.

தில்லி, அகமதாபாத், லக்னோ, வாரணாசி மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் உள்ள 5 கொவிட் மருத்துவமனைகளுக்கு ராணுவம் உதவிகளை அளித்துள்ளது. 

ஆட்கள் மற்றும் பொருட்கள்  உதவிகள் அளிப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக, தலைமை இயக்குனர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் கொவிட் மேலாண்மை பிரிவு ஒன்றை ராணுவம்  ஏற்படுத்தியுள்ளது.

 இந்தப் பிரிவு  கொவிட் மேலாண்மை விவரங்களை ராணுவ துணை தளபதியிடம் நேரடியாக தெரிவிக்கிறது. 

நாடு முழுவதும் கொவிட் பாதிப்பு அதிகரிப்புக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில், இந்த நடவடிக்கை அதிக செயல் திறனை கொண்டு வரும். தில்லி உட்பட நாடு முழுவதும் பல இடங்களில், உள்ளூர் நிர்வாகத்துக்கு கொவிட் பரிசோதனை, ராணுவ மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளுக்கு அனுமதி, முக்கியமான மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லுதல் போன்ற உதவிகளை ராணுவம் ஏற்கனவே செய்து வருகிறது.

கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், தேசிய அளவிலான முயற்சிகளுக்கு உதவுவதில் இந்திய ராணுவம் உறுதியுடன் உள்ளது. 

*****************

 


(Release ID: 1716620) Visitor Counter : 185


Read this release in: English , Urdu , Hindi , Punjabi