சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

முதலீட்டு செலவை குறைக்க இந்தியாவில் நவீன சுரங்க பாதை முறைகளை பின்பற்ற வேண்டும்: நிதின்கட்கரி

Posted On: 05 MAY 2021 6:05PM by PIB Chennai

முதலீட்டு செலவை குறைக்க இந்தியாவில் நவீன சுரங்க பாதை முறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின்கட்கரி கூறியுள்ளார்.

 சாலை சுரங்கபாதையில் சமீபத்திய போக்குகள், புதுமைகள் மற்றும் முன்னோக்கிய வழி என்ற தலைப்பில் நடந்த சர்வதேச காணொலி கருத்தரங்கில் அமைச்சர் நிதின்கட்கரி இன்று உரையாற்றினார்.

சுரங்கப் பாதைகள், ஆறு மற்றும் கடலுக்கு அடியில் செல்லும் சுரங்கப்பாதைகள் அமைப்பது போன்றவற்றை ரெடிமேட் கான்கிரீட் அச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளும் வழிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் திரு. நிதின்கட்கரி கூறினார். 

சுரங்கப்பாதை திட்டத்தில் , பாதுகாப்பை சமரசம் செய்யாமல், முதலீட்டு செலவை குறைக்கும் தொழில்நுட்பம் தேவை என அவர் வலியுறுத்தினார்.

ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது, சாலை வசதிகளை ஏற்படுத்துவது, சுரங்கப்பாதை அருகே இதர வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே.சிங் பேசுகையில், ‘‘ செல்ல முடியாத இடங்கள், மற்றும் குளிர் காலத்தில் பனியால் துண்டிக்கப்படும் இடங்களில் அதிகளவு சுரங்க பாதைகளை உருவாக்குவதை  சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உறுதி செய்கிறது’’ என்றார்.  

இந்த காணொலி கருத்தரங்கைஇந்திய சாலைகள் அமைப்பு மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் உலக சாலைகள் அமைப்பு ஆகியவை நடத்தின.

*****************



(Release ID: 1716353) Visitor Counter : 160