ரெயில்வே அமைச்சகம்
4400-க்கும் மேற்பட்ட கொவிட் சிகிச்சை ரயில் பெட்டிகளில் 70,000 தனிமை படுக்கை வசதிகள் உள்ளன : ரயில்வே அறிவிப்பு
प्रविष्टि तिथि:
05 MAY 2021 5:25PM by PIB Chennai
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், தேவைப்படும் இடங்களில் கொரோனா தனிமை சிகிச்சை பெட்டிகளை விரைவாக கொண்டு செல்லும் பணியில் ரயில்வேத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
4,400க்கும் மேற்பட்ட தனிமை பெட்டிகளில், சுமார் 70,000 படுக்கைகளுடன் தனிமை வார்டுகள் கிடைக்கச் செய்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்த தனிமை பெட்டிகளை நாகலாந்து மற்றும் குஜராத் அரசுகளும் கேட்டன. இதையடுத்து இந்த தனிமை ரயில் பெட்டிகள் விரைவாக கொண்டு செல்லப்பட்டு சபர்மதி, சந்த்லோதியா மற்றும் திமாபூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
மாநிலங்களின் கோரிக்கைப்படி, தற்போது 232 ரயில் பெட்டிகள் 4000 படுக்கைகளுடன் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இங்கு மொத்தம் 162 பேர் சேர்க்கப்பட்டனர். 96 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது கொவிட் நோயாளிகள் 66 பேர் தனிமை பெட்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
3600க்கும் மேற்பட்ட படுக்கைகள் இன்னும் காலியாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716261
*****************
(रिलीज़ आईडी: 1716332)
आगंतुक पटल : 309