உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் கொவிட் தடுப்பூசி முகாம், மூத்த குடிமக்களுக்கு தனி உதவிப்பிரிவு
Posted On:
05 MAY 2021 4:54PM by PIB Chennai
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டாவது கொவிட் தடுப்புமருந்து முகாம் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 2021 மே 3 அன்று தொடங்கிய இந்த முகாமில் 2,000-க்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நாளை அதிகம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் தேசிய சுகாதார இயக்கம், அஸ்ஸாம், இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
பல்வேறு இளம் அதிகாரிகள் மற்றும் கவுகாத்தி விமான நிலைய பணியாளர்களுக்கு இதுவே முதல் தடுப்பூசி முகாமாகும்.
பணியாளர்கள் மட்டுமில்லாமல், அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தினர், இந்திய விமான நிலைய ஆணைய ஊழியர்கள், முகமைகள், முன்கள பணியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
முதல் நாள் அன்றே 12000 பேர் பதிவு செய்துகொண்ட நிலையில், மொத்தம் 3000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மூத்த குடிமக்களுக்கு உதவ தனி உதவிப்பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
*****************
(Release ID: 1716330)