சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அவசர சுகாதார சேவைகளுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு ரூ.50,000 கோடி நிதி : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted On: 05 MAY 2021 1:02PM by PIB Chennai

கொவிட்-19 இரண்டாம் அலை பாதிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில், பணப்புழக்க நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் தொற்றுக்கு எதிரான விரிவான உத்தியின் முதல் பாகம் என அவர் கூறினார்.

அவசர சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதற்கும், கொவிட் தொடர்பான சுகாதார கட்டமைப்பு மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கும், வங்கிகளுக்கு ரூ.50,000 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதியை  ரெப்போ வட்டி வீதத்தில் 3 ஆண்டுகள் வரையில் திருப்பி செலுத்தும் வகையில்  வழங்கப்படுகிறது.

இந்த பணப்பழக்க வசதி மூலம், பலருக்கு வங்கிகள் புதிதாக கடன் அளிக்க முடியும். இந்த கடன் வசதி 2022 மார்ச் 31ம் தேதி வரை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க, வங்கிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தனிநபர்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியை போக்க பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனிநபர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்கள், 2021 மார்ச் 31ம் தேதி வரை எந்த திட்டத்தின் கீழும் கடன் பெறாமல் இருப்பவர்கள் தீர்வு திட்டம் 2.0-ன் கீழ் ரூ.25 கோடி வரை கடன் பெற தகுதியுடைவர்களாக கருதப்படுவர்.

தீர்வு திட்டம் 1.0-ன் கீழ் மாற்றியமைக்கப்பட்ட கடன்களை பெற்ற தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்ளுக்கு கடன் தவணையை திருப்பிச் செலுத்த 2 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்பட்டது. தற்போது கடன் வழங்கிய நிறுவனங்கள் இந்த காலத்தை அதிகரிக்கலாம்.

மீதமுள்ள காலத்தை மொத்தம் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். 

சிறு தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  மாற்றியமைக்கப்பட்ட கடன்களை ஏற்கனவே பெற்றிருந்தால், கடன் வழங்கும் வங்கிகள், ஒரு முறை நடவடிக்கையாக மூலதன அனுமதி வரம்பை மறு ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இதே போல் மாநில அரசுகள்  கடன் பெறும் வசதியிலும் ரிசர்வ் வங்கி தளர்வுகளை அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716115

*******************(Release ID: 1716244) Visitor Counter : 229