மத்திய அமைச்சரவை
உலகளாவிய புத்தாக்க கூட்டுறவு தொடர்பாக இந்தியா-இங்கிலாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
05 MAY 2021 12:20PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உலகளாவிய புத்தாக்க கூட்டுறவு தொடர்பாக, இந்தியாவும், இங்கிலாந்தும் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகமும், இங்கிலாந்து நாட்டின் அயலுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மூன்றாம் உலக நாடுகளில் தமது புத்தாக்க முயற்சிகளை விரிவுபடுத்த இந்திய ஆய்வாளர்களுக்கு உதவும். இதன் மூலம் அவர்கள் புதிய சந்தைகளைக் கண்டறியவும், தற்சார்புடன் செயல்படவும் இயலும். இந்தியாவில் புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்புக்கும் இது பங்களிக்கும்.
•••••
(Release ID: 1716097)
(रिलीज़ आईडी: 1716130)
आगंतुक पटल : 317
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam