அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியாவில் போதுமான மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்க ஆக்ஸிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்குகிறது சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ

Posted On: 04 MAY 2021 7:05PM by PIB Chennai

ஆக்ஸிஜன் தொடர்பான தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை , காணொலி காட்சி மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு மையம் சிஎஸ்ஐஆர் - துர்காபூரில் உள்ள மத்திய இயந்திரவியல் பொறியியல் ஆராய்ச்சி மையத்துடன் (சிஎம்இஆர்ஐ) இணைந்து நடத்தியது.

இந்நிகழ்ச்சியில்  இஎம்ஆர்ஐ இயக்குனர் டாக்டர் ஹரிஸ் ஹிரானி உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

உயிரை காப்பதில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முக்கியமான பங்கு வகிப்பதை  பேராசிரியர் ஹரிஸ் ஹிரானி வலியுறுத்தினார். 

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முறையாக கையாள்வது மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு மாற்று உத்திகளை பெறுவது போன்றவை கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் உதவலாம் என  பேராசிரியர் ஹிரானி கூறினார்.  ஆக்ஸிஜன் தேவையை நிறைவேற்ற, ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அதிகளவில் உற்பத்தி செய்ய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ எதிர்பார்ப்பதாக போராசிரியர் ஹிரானி கூறினார்.

ராஜஸ்தான் அரசின் தொழில்துறை கூடுதல் இயக்குனர் திரு சஞ்சீவ் சக்சேனா பேசுகையில், ‘‘ சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் விநியோக கருவிகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதற்கு தேவையான நிதியுதவியை அரசு விதிமுறைகள் படி மானியமாக பெறலாம்’’ என்றும் கூறினார்.

சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ அமைப்பின் தொழில்நுட்பம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மைல்கல்லாக இருக்க முடியும் என சிஐடிஏ அமைப்பின் தலைவர் டாக்டர் ரோகித் ஜெயின் கூறினார்.  இந்த தொழில்நுட்பத்தை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், இது அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் முனைவோர்கள், சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டி மற்றும் அதன் தொழில்நுட்பம், தொழிநுட்ப பரிமாற்றத்துக்கான நடைமுறை ஆகியவற்றை  அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1715979

*****************


(Release ID: 1716017)