பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

தேசிய அளவில் சுவாமித்வா திட்டத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் காபி டேபிள் புத்தகத்தை வெளியிட்டார் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 04 MAY 2021 6:47PM by PIB Chennai

கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கிராமப் பகுதிகளை விவரணையாக்கம் என்ற சுவாமித்வா திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்படுவதைக் குறிக்கும் வகையில் அதை செயல்படுத்துவதற்கான புதிய கட்டமைப்பு மற்றும் காபி டேபிள் புத்தகத்தை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், காணொலி வாயிலாக இன்று வெளியிட்டுப் பேசினார்.

9 மாநிலங்களில் சோதனை முயற்சியாக சுவாமித்வா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இந்தத் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய அளவில் தொடங்கி வைத்தார்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சொத்துரிமைகள் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை நாடு முழுவதும்  7400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 7,00,000 பயனாளிகளுக்கு சொத்துரிமை அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக நிகழ்ச்சியின் போது அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருவாய் மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலாளர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய நில அளவைத் துறை, நில வளங்கள் துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715953

*****************



(Release ID: 1715987) Visitor Counter : 244