வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு மாநிலங்களில் ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை : டாக்டர் ஜித்தேந்திரா சிங்

Posted On: 03 MAY 2021 6:18PM by PIB Chennai

அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும், ஆக்ஸிஜன் ஆலைகள் உட்பட கொவிட் தொடர்பான கட்டமைப்பை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் எடுத்து வருவதாக வடகிழக்கு பகுதி மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் ஒரு ஆக்ஸிஜன் ஆலை அமைக்கப்பட்டதாகவும், இதர மாநிலங்களின் தொலை தூர பகுதிகளிலும்இதே போன்ற ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும்   இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  5 ஆக்ஸிஜன் வேன்களை ரூ. 5 கோடி செலவில் வாங்கும் அருணாச்சலப் பிரதேச அரசின் திட்டம் குறித்தும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக பரிசீலிக்கிறது.

கொவிட்டுக்கு எதிரான நடவடிக்கைக்காக, வடகிழக்கு மாநிலங்களுக்கு, ஒருங்கிணைந்த நிதியாக ரூ.25 கோடி வழங்கப்பட்டது என்றும், இது பல மருத்துவமனைகளில் முக்கியமான கருவிகள் வாங்க உதவியாக இருந்ததாகவும் டாக்டர் ஜித்தேந்திரா சிங் தெரிவித்தார்

வடகிழக்கு மாநிலங்களில் எங்கேயும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் பல மாநிலங்களில் கூடுதல் இருப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்தாண்டு, ஊரடங்கின் ஆரம்ப காலத்திலே வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்தாண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, கொவிட் பாதிப்பையும் பொருட்படுத்தாமல், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து 2வது ஆண்டாக வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, நிதியாண்டு முடிவதற்கு முன்பே 100 சதவீதம் செலவழிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, வடகிழக்கு மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்ல பிரதமர் உத்தரவிட்டதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். அதேபோன்ற நடவடிக்கையை இந்தாண்டும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அசாமில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715719

-----



(Release ID: 1715743) Visitor Counter : 207