பிரதமர் அலுவலகம்

அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களுடனான கூட்டத்தில், கொவிட் சம்பந்தமான நிலை குறித்து பிரதமர் ஆய்வு

Posted On: 30 APR 2021 8:45PM by PIB Chennai

வெவ்வேறு அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களின் செயல்பாடுகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் நீட்டிப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து பொருளாதாரம் மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு, பிரதமரிடம் எடுத்துரைத்தது.

எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை முன்முயற்சியால் ஏராளமானோர் பயனடைந்திருப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலவச உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல், கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு, மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய காலத்தில் பயனடைவதற்காக, நிலுவையிலுள்ள காப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கூறினார்.

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து விநியோக சங்கிலி மற்றும் தளவாடங்கள் மேலாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழு விளக்கமளித்தது.

விநியோக சங்கிலி பணிகளில் இடர்பாடுகள் ஏற்படாமல், சுமுகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, முழுமையாக திட்டமிடுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் அரசு எவ்வாறு திறம்பட இணைந்து பணியாற்றுகிறது என்பதை, தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழு பிரதமரிடம் எடுத்துரைத்தது.

சுகாதார துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், தன்னார்வலர்களுக்கு தனிச்சிறப்பற்ற பணிகளை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மருத்துவ பணியாளர்களுக்கும், நோயாளிகள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கும் இடையிலான தகவல்களை பரிமாறும் பணியில், அரசு சாரா நிறுவனங்கள் உதவிகரமாக இருக்கக்கூடும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பு கொள்வதில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊக்கமளிக்கப்படலாம்.

-------(Release ID: 1715340) Visitor Counter : 7