தேர்தல் ஆணையம்
மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட சட்டப்பேரவை தேர்தல் நிறைவு: 35 தொகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு
Posted On:
29 APR 2021 6:36PM by PIB Chennai
மேற்கு வங்கத்தில், 35 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று கடைசி கட்ட தேர்தல் நிறைவடைந்தது.
இங்குள்ள 11,860 வாக்குச் சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, கொவிட் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 76.07 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
தேர்தல் வன்முறையின்றி, பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. மத்திய ஆயுத படைகள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் நியாயமாக நடக்க, தேர்தல் ஆணையம் ஆரம்பம் முதல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேற்கு வங்கத்தில் ஆரம்பம் முதல் கடைசி கட்ட தேர்தல் வரை, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.339.45 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
கடைசிக் கட்ட தேர்தலில் மொத்தம் உள்ள 11,860 வாக்குச்சாவடிகளில் 6,074 வாக்குச்சாவடிகள் வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டன. கடுமையான தடுப்பு நடவடிக்கைகளால், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சரியான நேரத்தில் கைப்பற்றப்பட்டது அமைதியான தேர்தலை உறுதி செய்தன.
தேர்தலில் அச்சமின்றி வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் அமைதியாக நடைபெற காரணமாக இருந்த அனைவருக்கும் தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது.
கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி, வாக்கு எண்ணும் பணிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு விரிவான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714901
*****************
(Release ID: 1714921)
Visitor Counter : 289