தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்றின் போது மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்காக தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளை சென்றடைகிறது

Posted On: 29 APR 2021 4:30PM by PIB Chennai

மருத்துவப் பயன்

காப்பீடு பெற்றுள்ள நபர் மற்றும்/ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொவிட் பாதிப்பு ஏற்பட்டால் பிரத்தியேக கொவிட்-19 மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டுள்ள எந்த ஒரு தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவன மருத்துவமனையிலும் இலவசமாக மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தால் நேரடியாக நடத்தப்படும் 21 மருத்துவமனைகள் (3676 கொவிட் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 229 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மற்றும் 163 சுவாச கருவியுடன் கூடிய படுக்கைகள்) மற்றும் 2023 படுக்கைகளுடன் கூடிய மாநில அரசுகளால் நடத்தப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்ட மருத்துவமனைகள் பிரத்தியேக கொவிட்-19 மருத்துவமனைகளாக செயல்படுகின்றன.

மேலும், குறைந்தபட்சம் 20% படுக்கைகளை ஈ எஸ் ஐ காப்பீட்டுதாரர்கள், பயனாளிகள் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பிரத்தியேக கொவிட் படுக்கைகளாக ஒதுக்குமாறு அனைத்து தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவன மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

தீவிர கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் திறம்பட செயலாற்றும் பிளாஸ்மா சிகிச்சை, தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவன மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, பரிதாபாத், ஹரியானா மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவன மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, சனத் நகர், தெலங்கானா ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது.

அவசர கால மற்றும் அவசரமில்லா மருத்துவ சிகிச்சைகளுக்காக பரிந்துரை கடிதம் இல்லாமல் கூட்டு மருத்துவமனையை நேரடியாக இஎஸ்ஐ பயனாளிகள் அணுகலாம்.

கொவிட்டால் பாதிக்கப்பட்ட காப்பீட்டுதாரரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ ஒருவேளை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்கான செலவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

பணப் பயன்

கொவிட் பாதிப்பின் காரணமாக காப்பீட்டுதாரர் ஒருவேளை பணியில் இருந்து விலகி இருக்க நேர்ந்தால், அவருக்கு உரிய நோய்க்கால பலனை பெறலாம். சராசரி தினசரி கூலியில் 70% நோய்க்கால பயனாக 91 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

காப்பீட்டுதாரர் பணி இழக்க நேர்ந்தால், அடல் பீமித் வியாக்தி கல்யாண் திட்டத்தின் கீழ் தினசரி சராசரி ஊதியத்தில் 50 சதவீதம் என 90 நாட்களுக்கு நிவாரணம் பெறலாம். இந்த நிவாரணத்தை பெறுவதற்காக atwww.esic.in எனும் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வேலை நீக்கம் அல்லது தொழிற்சாலை பிரச்சினைகள் சட்டம் 1947-ன் படி தொழிற்சாலை/ நிறுவனம் மூடுதல் ஆகிய காரணத்தால் காப்பீட்டுதாரர் பணியிழக்க நேர்ந்தால், ஆர் ஜே எஸ் கே ஒய் திட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களுக்கு வேலையின்மை படியை பெறலாம்.

ஒருவேளை காப்பீட்டுதாரர் உயிரிழக்க நேர்ந்தால், இறுதி சடங்கு செலவுக்காக குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினருக்கு ரூபாய் 15,000 வழங்கப்படும்.

*****************



(Release ID: 1714884) Visitor Counter : 212